நடிகர் விஜய்யின் பிரமாண்ட வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது GOAT திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.
நடிகர் விஜய்யின் பிரமாண்ட வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா | Thalapathy Vijay House Price
GOAT திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 69ல் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஹெச். வினோத் இயக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய்க்கு நீலாங்கரையில் சொந்தமான பிரமாண்டமான வீடு ஒன்று இருக்கிறது. வீட்டின் வெளியே இருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. ரசிகர்கள் சிலர் அங்கு சென்று விஜய் வீட்டின் வாசலில் இருந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களும் அவ்வப்போது வெளிவரும்.
இந்த நிலையில், பிரமாண்டமாக விஜய் கட்டியுள்ள இந்த வீட்டின் மதிப்பு ரூ. 80 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த வீட்டின் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.