தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், திரைத்துறைக்கு வருவதற்கு முன் நடிகை திரிஷாவுடன் இணைந்து நடித்த விளம்பர வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
சின்னத்திரையில் மிமிக்ரி கலைஞராகத் தனது பயணத்தைத் தொடங்கி, இன்று கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஹீரோவாக சிவகார்த்திகேயன் ஜொலித்து வருகிறார். அவர் ஆரம்ப காலத்தில் பிரபல நடிகை திரிஷாவுடன் இணைந்து ஒரு விளம்பரப் படத்தில் நடித்துள்ளார். அந்த சமயத்தில் சிவகார்த்திகேயனை யாரும் பெரிய அளவில் கவனிக்கவில்லை. ஆனால், இன்று அவர் அடைந்துள்ள உச்சத்தைக் கொண்டாடும் விதமாக ரசிகர்கள் அந்தப் பழைய வீடியோவைத் தேடிப்பிடித்து வைரலாக்கி வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படம் விமர்சன ரீதியாகக் கலவையான கருத்துகளைப் பெற்றாலும், வசூல் ரீதியாகப் சாதனை படைத்துள்ளது.
இப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூலைக் கடந்துள்ளதாகப் படக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் வேல்யூ மேலும் அதிகரித்துள்ளது.
இதேவேளை, அஜித் குமார் நடிப்பில் மீண்டும் வெளியான ‘மங்காத்தா’ திரைப்படம், ரீ-ரிலீஸிலும் கடந்த 6 நாட்களில் வசூல் வேட்டை நடத்தி பாக்ஸ் ஆபீஸில் அதிரடி காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

