24 66bc746ac3488
சினிமா

‘தங்கலான் மாபெரும் வெற்றியடையும்’.. வைரலாகும் சூர்யாவின் பதிவு.. எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள்!

Share

‘தங்கலான் மாபெரும் வெற்றியடையும்’.. வைரலாகும் சூர்யாவின் பதிவு.. எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள்!

சீயான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் நடித்து பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகும் படம் தங்கலான். இந்த படம் தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நாளை அதாவது ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

இந்த நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இப்படம் கண்டிப்பாக ஆஸ்கார் பெரும் என்ற உறுதியில் படக்குழுவினர் உள்ளனர்.

மேலும், புரோமோசனுக்காக மதுரையில் உள்ள ஒரு புகழ்பெற்ற தனியார் கல்லூரிக்கும், வெளி மாநிலங்களில் உள்ள மெட்ரோ நகரங்களுக்கும் சென்று அங்கு ரசிகர்களைச் சந்தித்து படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களையும் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

இவ்வாறு விறுவிறுப்பாக ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த படத்திற்காக விக்ரம் தன் முழு உழைப்பையும் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தங்கலான் படத்தை பாராட்டி நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இந்த படத்தின் வெற்றி மிக பெரிதாக அமையும் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் உள்ள படத்தின் எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

 

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...