6 26
சினிமாசெய்திகள்

உயிரிழந்த பெண்.. நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்த போலீஸ்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Share

உயிரிழந்த பெண்.. நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்த போலீஸ்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் அல்லு அர்ஜுன் நாடியில் சமீபத்தில் வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன், ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு வந்திருந்தார்.

திடீரென எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி அல்லு அர்ஜுன் வந்ததால், அவரை காண கூட்டம் அலைமோதியது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து அந்த திரையரங்க உரிமையாளர், மேனேஜர், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் அல்லு அர்ஜுன் மீதும், போலீஸ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு தருவதாக அல்லு அர்ஜுன் அறிவித்தார். அதோடு தன்மீதான வலக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த செய்தி அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
30 5
பொழுதுபோக்குசினிமா

விழுப்புரம் அதிமுக கூட்டத்தில் சர்ச்சை பேச்சு: நயன்தாராவை இழுத்து விமர்சித்ததால் பரபரப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த...

29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...