இளையராஜா காலில் விழுந்த தேசிய விருது பிரபலம்
சமீபத்தில் 69வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ் சினிமா புறக்கணிக்கப்பட்டதாக பல்வேறு பிரபலங்கள் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
குறிப்பாக ஜெய் பீம் படத்திற்கு விருது கிடைக்காதது ஏமாற்றம் என தெலுங்கு நடிகர் நானி உட்பட பலரும் பதிவிட்டு இருந்தனர்
இளையராஜா காலில் விழுந்த DSP
தெலுங்கு படமான புஷ்பா படத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு சிறந்த இசையமைப்பாளர் என்ற தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருகிறது.
தற்போது DSP இசையமைப்பாளர் இளையராஜா வீட்டுக்கு சென்று அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறார். அந்த வீடியோவை அவரே ட்விட்டரில் வெளியிட்டு இளையராஜாவுக்கு நன்றி கூறி இருக்கிறார்.