மரணத்தோடு மோதிய உலகழகி..! ஓபல் சுசாட்டாவின் கசப்பான வாழ்க்கைச் சம்பவங்கள்…

1748708635 thai 6 683c47f80cae8

உலக அழகி பட்டம் வெல்பவர்களின் வாழ்வு வெற்றிப்படியாகத் தொடங்கும் எனப் பலர் நினைப்பார்கள். ஆனால் சிலருக்கு அந்த வெற்றி ஒரு போராட்டத்தின் முடிவாகும். அப்படிப்பட்டவர் தான் தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசாட்டா. தற்போது 2025ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், அந்த வெற்றிக்குப் பின்னால் மரணத்தை அருகில் பார்த்த அனுபவங்களும், அழிவைக் கடந்து மீண்டெழுந்த உறுதியும் உள்ளன என்பதை பெருமையாக தற்பொழுது கூறியுள்ளார்.

2025ம் ஆண்டு Miss World பட்டத்தை வென்றவர் ஓபல் சுசாட்டா. இதனால், தாய்லாந்து, அழகுப் போட்டிகளில் பெருமைப்படும் நாடாக மாறியது. ஒரு பெண்மணி, தனது வாழ்வில் எதிர்கொண்ட மிகப்பெரிய சவால்களை ஜெயித்து, உலகமே பாராட்டும் அழகி ஆவதற்கான சான்றாகவே, இப்போது உலகம் முழுவதும் ஓபலின் பெயர் பேசப்படுகின்றது.

அதிகமானோருக்கு 16வது வயது என்பது கனவுகள் முளைக்கும் பருவம். ஆனால் ஓபலுக்கு அந்த வயதில் வந்தது மார்பக புற்றுநோய். திடீரென அடையாளம் கண்ட அந்த நோய், அவரது வாழ்க்கையை முற்றிலும் புரட்டிப் போட்டது.

முதன்மை நிலை புற்றுநோய் என மருத்துவர்கள் உறுதி செய்ததும், ஓபல் ஒரு நொடியும் தாமதிக்காமல் சிகிச்சை மேற்கொண்டார். கீமோதெரபி, மனதளவிலான ஆழ்ந்த பாதிப்பு ஆகியவை அவளுக்கு எதிரிகளாக இருந்தாலும், அவற்றை சிறப்பாக வெற்றி கொண்டார்.

ஓபல் சுசாட்டா, தாய்லாந்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தாய் மொழியுடன் சைனீஸ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளையும் பேசக் கூடியவர். இது அவரை உலக அழகி போட்டிகளில் கலந்து கொண்ட மற்ற போட்டியாளர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தியது.

புற்றுநோயைக் கடந்து வாழ்வில் மீண்ட ஓபல், அதை மறந்துவிடாது அந்தப் நோய்க்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மேற்கொண்டார். “மார்பக புற்றுநோய் ஒரு பெண்குலத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே ஒரு எதிரி. அதை உடனே கண்டுபிடித்தால் நம்மால் வெல்ல முடியும்” என்கிறார் ஓபல்.

ஓபலின் வெற்றி, தாய்லாந்துக்கு உலக அளவில் பெருமை சேர்த்துள்ளது. அவரை மிகுந்த வெறுப்பிற்குள்ளாகிய ஒரு நோயையும், எதிர்மறையான பார்வைகளையும் மீறி, ஒரு நாட்டை உலக மேடையில் நிமிர்த்தியுள்ளார். தாய்லாந்து அரசாங்கம், ஊடகங்கள் மற்றும் மக்களும் இப்போது அவரை தேசிய ரத்தினமாக கருதுகின்றனர்.

 

Exit mobile version