அடேங்கப்பா… பிக் பாஸில் விசித்ராவுக்கு தான் அதிக சம்பளமாம்? இளசுகள் கதறல்
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. பிரதீப் ஆண்டனி வீட்டை விட்டு சென்ற பிறகு விசித்ராவுக்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டே வருகின்றனர்.
அதேபோல, பிரதீப் வெளியேற்றத்திற்கு பிறகு விசித்ரா சொன்ன கருத்துகளும், தனக்கு எதிராக செயல்படும் ஹவுஸ்மெட்ஸை அவர் டீல் செய்யும் விதமும் ரசிக்ர்களை கவர்ந்துள்ளது.
இதனால் வார இறுதியில் ஒளிபரப்பாகும் கமல்ஹாசன் எபிசோடில் விசித்ராவுக்கு கைத்தட்டல் அதிகரித்தது.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் விசித்ராவுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் சம்பள விபரம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, பிக் பாஸ் வீட்டில் உள்ள விசித்ராவுக்கு ஒரு நாளைக்கு 40,000 வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.
அதேபோல, பிக் பாஸ் போட்டியாளர்களில் அதிக சம்பளம் பெறும் போட்டியாளர் இவர்தான் என்றும் கூறப்படுகிறது.