கொரோனாவில் சிக்கிய சினிமா பிரபலங்கள்!

WhatsApp Image 2022 01 11 at 11.53.07 AM

உலகளாவிய ரீதியில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துவரும் கொரோனாத் தொற்று இந்தியாவில் மிக தீவிரம் அடைந்துள்ளது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபலங்களும் இத் தொற்றில் சிக்கி வருவது குறிப்பிடதக்கது.

குறிப்பாக அண்மையில் நடிகர் கமல்ஹாசன் தொற்றால் பாதிப்படைந்து குணமடைந்த அதேவேளை தற்போது விக்ரம் மற்றும் அர்ஜுன்,வடிவேல் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த வரிசையில் தற்போது தென்னிந்திய நடிகர் நடிகைகளான சத்தியராஜ், அருண்விஜய் விஷ்ணு விஷால் மற்றும் நடிகைகளான மீனா, திரிஷா, குஷ்பு ஆகியோரும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தமிழ் சினிமாவில் 90களில் கலக்கி வந்த முன்னணி நடிகையும் பிரபல பரதநாட்டிய கலைஞருமான சோபனா ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இந்த பிரபலங்கள் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில், அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என அவர்களது ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.

Exit mobile version