சில்லி பிரெட்

1781913 chilli bread

தேவையான பொருட்கள்:

பிரெட் ஸ்லைஸ் – 10
தக்காளி சாஸ் – ஒரு தேக்கரண்டி
சிவப்பு கேசரி கலர் – சிறிதளவு
கொத்தமல்லி இலை – அரை கட்டு
எலுமிச்சை ஜுஸ் – சிறிதளவு
கரம் மசாலா தூள் – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 2
தக்காளி – 2
கீறிய பச்சை மிளகாய் – 3
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
நெய் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பிரெட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

வாணலியில் நெய் விட்டு பிரெட் துண்டுகளை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதே வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கிய பின் தக்காளி போட்டு வதக்கவும். தக்காளி வதங்கிய பின்னர் தக்காளி சாஸ், சிவப்பு கேசரி கலர், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும்.

மசாலா பச்சை வாசனை போனவுடன் வறுத்து வைத்துள்ள பிரெட் துண்டுகள், உப்பு போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.

பரிமாறும் முன் கொத்தமல்லி இலை, எலுமிச்சை ஜுஸ், சிறிது வெங்காயம் சேர்த்து பரிமாறவும்.

இப்போது சுவையான, காரமான குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பிரெட் தயார்.

#LifeStyle

Exit mobile version