3 14
சினிமாபொழுதுபோக்கு

நல்லது சொல்ல கூட இருங்க.. தவறா சொல்லி ஏத்திவிட வேண்டாம்.. கரூர் துயர சம்பவம் குறித்து இயக்குநர் சேரன் பதிவு

Share

கடந்த அக்டோபர் 27ஆம் தேதி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது கரூர் சம்பவம். விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இது இந்திய அரசியலில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், நாளை தீர்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரோடு விஜய் வீடியோகாலில் பேசியுள்ளார். தனக்கு காவல்துறையிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் நேரில் வந்து சந்திக்கிறேன் என கூறியிருக்கிறார் தவெக தலைவர் விஜய்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை மொத்தமாக அழைத்து திருமண மண்டபத்தில் விஜய் சந்திக்க போவதாக ஒரு தகவல் வெளிவந்தது.

இதற்கு இயக்குநர் சேரன், “உயிர் இழந்தவர்கள் குடும்பங்களை கூட வரவைச்சுத்தான் ஆறுதல் சொல்லுவிங்களா சார். ரொம்ப தவறா இருக்கு விஜய். நேர்ல ஒவ்வொருவர் வீட்டுக்கு போறதுதான மரியாதை. அப்போதான உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கலங்கம் விலகும். அது முடியாதுன்னா எதுக்குமே உங்களால மக்களோட நிக்கமுடியாது” என எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதற்கு இயக்குநர் ஜான் மகேந்திரன், “மிகவும் முதிர்ச்சியற்ற மற்றும் நடைமுறைக்கு மாறான ஆலோசனை. அவர் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றால் ஏற்படும் குழப்பத்தை கற்பனை செய்து பாருங்க” என பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் சேரன் தற்போது ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். இதில் “ஒரு தலைவன் எப்பவும் என் பக்கத்துல வந்து எனக்காக நிப்பான்ற நம்பிக்கை உருவாக்கனும்.. முடியலைன்னா அத வளர்த்துக்கனும். ரசிகர் மன்றம் இருக்கவரை யாரும் கேட்கல. எங்களை எப்போ ஆளனும்னு வர்றிங்களோ அப்போதுதான் இந்த கேள்வி. நல்லது சொல்ல கூட இருங்க. தவறா சொல்லி ஏத்திவிட வேண்டாம்” என கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...

dailythanthi 2026 02 14 7466cod3 6
பொழுதுபோக்குசினிமா

தனுஷின் D55: 35 கோடி சம்பளத்தை மறுத்த மம்மூட்டி! – ‘கதைக்காக’ எடுத்த அதிரடி முடிவு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான தனுஷ், தற்போது தனது 55-வது திரைப்படத்தை இயக்கி...

1612945 varalaxmi
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநராக அவதாரம் எடுத்த வரலட்சுமி சரத்குமார்! – சரஸ்வதி படத்திற்காகப் புரட்சிகரமான புரோமோ வீடியோ வெளியீடு!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் எனப் பல மொழிகளில் தனது சிறப்பான நடிப்பால் முத்திரை...

26 698c2e116f1d6
சினிமாபொழுதுபோக்கு

ஜெயிலர் 2-வில் இணைந்தார் எஸ்.ஜே. சூர்யா! – சிவராஜ்குமார் உறுதி செய்த அதிரடித் தகவல்!

2023 ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாகத் தயாராகி...