2008-ம் ஆண்டு சசி இயக்கத்தில் வெளியான பூ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் பூ ராமு.
இவர் நீர்ப்பறவை, தங்க மீன்கள், பரியேறும் பெருமாள், பேரன்பு, கர்ணன், சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்து அனைவரின் மத்தியிலும் நீங்கா இடம்பிடித்தார்.
இதற்கிடையே, சமீப நாட்களாகவே நடிகர் பூ ராமு உடல்நலம் குன்றி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பூ ராமு சிகிச்சை பலனின்றி காலமானார்
இவரது உடல் ஊரப்பாக்கம், பெரியார் நகரில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டு செல்லப்படவுள்ளது.
பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு நாளை இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#CinemaNews
Leave a comment