‘தளபதி 67’ இல் இணைந்த பிரபலங்கள் – தொடரும் அப்டேட்கள்

Fn0EdqGaEAMijHs

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 67’ படத்தின் அப்டேட்டுகள் நேற்று மாலை முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு அப்டேட் வந்தது என்பதும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் வெளியானது என்பதையும் பார்த்தோம்.

நேற்றைய அப்டேட்டில் ’தளபதி 67’ திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை நடிகர் சஞ்சய்தத், நடிகை பிரியா ஆனந்த், நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர், பிரபல இயக்குனர் மிஷ்கின், நடிகர் மன்சூர் அலிகான், பிரபல நடிகர் மாத்யூ தாமஸ், பிரபல இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் 8 நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது.

இதில் அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின் மற்றும் சஞ்சய் தத் ஆகிய ஐந்து பிரபலங்கள் இந்த படத்தில் வில்லன்களாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டுள்ள நேற்றைய கடைசி அறிவிப்பில் நாளையும் அப்டேட் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று த்ரிஷா உள்பட ஒரு சில பிரபலங்கள் ’தளபதி 67’ படத்தில் இணையும் தகவல்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் நேற்று மாலை முதல் ’தளபதி 67’ ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டில் இருக்கும் நிலையில் இன்றும் அந்த ட்ரெண்ட் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனிருத் இசையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் மற்றும் ஜெகதீஷ் தயாரிப்பில் உருவாகும் ‘தளபதி 67’ திரைப்படம் இதுவரை இல்லாத வகையில் தமிழில் பிரமாண்டமான படமாக இருக்கும் என்றும், மிகப்பெரிய வியாபாரத்தை இந்த படம் பெறும் என்றும் கூறப்படுகிறது.

#Cinema

Exit mobile version