இந்த செய்தி மட்டும் வரவே கூடாது என்று தமிழக மக்கள் அனைவருமே வேண்டினார்கள், ஆனால் அது நடந்துவிட்டது.
எல்லோராலும் நேசிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் இப்போது நம்முடன் இல்லை, இது சோகத்தின் உச்சமாக பார்க்கப்படுகிறது.
கொரோனா நோய் தொற்று அறியப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் அவர்கள் இன்று டிசம்பர் 28, உயிரிழந்துள்ளார்.
செய்தி கேட்ட மக்கள் அனைவருமே தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள், பிரபலங்களும் சோகமான பதிவு செய்து வருகிறார்கள்.