பாகற்காய் பகோடா

pogoda

தேவையான பொருட்கள்

பாகற்காய் – 200 கிராம்
கடலை மா – 100 கிராம்
அரிசி மா – 20 கிராம்
ஓமம் – கால் டீஸ்பூன்
ஆரஞ்சு ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை
மோர் – சிறிதளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
மிளகாய்த்தூள், உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

பாகற்காயை விதை நீக்கி வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

நீரை சூடாக்கி பாகற்காயை போட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டவும். பிறகு பாகற்காயை மோரில் போட்டு 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். அப்போது தான் கசப்பு இருக்காது.

அடுத்து பாகற்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கடலை மா, அரிசிமா, உப்பு, மிளகாய்த்தூள், ஓமம் மற்றும் ஃபுட் கலர் சேர்த்து, நீர் தெளித்து நன்கு பிசிறவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இந்தக் கலவையை சூடான எண்ணெயில் கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும். இப்போது சூப்பரான பாகற்காய் பகோடா ரெடி.

#LifeStyle

Exit mobile version