pixabay acne pimples 1200
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

முகப்பரு பிரச்சனைகளில் இருந்து விடுபடனுமா? சில அழகு குறிப்புக்கள் இதோ

Share

பெரும்பாலான பெண்கள், ஆண்கள் சந்திக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பருக்கள்.

இவை வந்தால் முகத்தின் அழகே பாழாகும். அதிலும் இந்த பருக்களானது முகத்தினை மிகவும் பொலிவிழந்தவாறு செய்யும்.

அதுமட்டுமின்றி, கடுமையான வலியையும் உண்டாக்கும். இதற்கு ஒரு சில வீட்டு மருத்துவம் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.

pixabay acne pimples 1200

  • தேனில் தக்காளித் துண்டை நனைத்து, முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும். தயிர் மற்றும் தக்காளி சாறு இரண்டையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவ, தழும்புகள் மறைந்து சருமம் பிரகாசமாக மின்னும்.
  • ஒரு தேக்கரண்டி தக்காளிச் சாறுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து, பஞ்சில் தோய்த்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்களுக்குப் பிறகு, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் இருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள பெரிய துளைகள் சுருங்கி முகம் பொலிவு பெறும்.
  • நன்கு கனிந்த 2 தக்காளி, 1/2 கப் தயிர் இரண்டையும் ஒன்றாக அரைத்து, முகம், கை, காலில் தினமும் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர, சூரிய ஒளியினால் ஏற்பட்ட கருமை மறையும்.
  • 3 தேக்கரண்டி தக்காளிச் சாறு, 1தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு, 2 தேக்கரண்டி மில்க் கிரீம் கலந்து, முகம் மற்றும் கழுத்தில் மாஸ்க் போட்டால், முகம் பளிச்சிடும். வாரம் இருமுறை இதுபோன்று செய்து வர வேண்டும்
  • 2 தேக்கரண்டி தக்காளிச் சாறு, 1 தேக்கரண்டி தயிர் கலந்து முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முகம் பிரகாசிக்கும்.
  • முகப்பரு பருக்களால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் இந்த குறிப்புக்களை பின்பற்றுவதால், முகப்பரு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இதற்கு தக்காளியிலுள்ள  வைட்டமின் ஏ மற்றும் சி தான் காரணம். சருமத்துளைகள் சுருங்கும் சிலருக்கு முகத்தில் மேடு பள்ளங்கள் அதிகம் இருக்கும்.
#BeautyTips

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15384441 newproject97
பொழுதுபோக்குசினிமா

ஜனநாயகன் படத்தைத் தொடர்ந்து தனுஷுடன் இணையும் எச்.வினோத்: இசையமைப்பாளராக சாம் சி.எஸ். உறுதி!

‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய எச்.வினோத், தனது அடுத்த...

25 694a3cc6694cc
பொழுதுபோக்குசினிமா

படைத்தலைவன்’ படத்தைத் தொடர்ந்து ‘கொம்புசீவி: கேப்டன் மகனின் அடுத்த அதிரடி!

மறைந்த நடிகர் ‘கேப்டன்’ விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம்...

44528881 6
பொழுதுபோக்குசினிமா

ரிலீஸிற்கு முன்பே சாதனை: ‘ஜனநாயகன்’ படத்தின் வெளிநாட்டு முன்பதிவு 4 கோடியைக் கடந்தது!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின்...

maxresdefault 1
பொழுதுபோக்குசினிமா

ஜனவரி 10-ல் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது...