துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’ திரைப்படம்: 8 நாட்களில் உலகளவில் ரூ. 45.5 கோடி வசூல்!

226674 thumb 665

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, கடந்த வாரம் வெளியான நடிகர் துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’ (Bison) திரைப்படம், திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படம் மூலம் நடிகர் துருவ் விக்ரமுக்குத் தனி அடையாளம் கிடைத்துள்ளதாகவும், அவர் இப்படத்திற்காகப் போட்ட உழைப்புப் பெரியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தின் மீது சிலர் கலவையான விமர்சனங்களை வைத்தாலும், பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பி வருகிறது.

‘பைசன்’ திரைப்படம் வெற்றிகரமாக 8 நாட்களைப் பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் நிலையில், அதன் உலகளாவிய வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 8 நாட்களில் ‘பைசன்’ படம் உலகளவில் இதுவரை ரூ. 45.5 கோடி வசூல் செய்துள்ளது.

Exit mobile version