பிக்பாஸ் தாமரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திரைப்பட படப்பிடிப்பில் என்ற கேப்ஷனுடன் கூடிய இரண்டு புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
அதில் சிங்கம் புலி மற்றும் ரோபோ சங்கர் ஆகிய இருவருடன் இருக்கும் புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த இருவரில் ஒருவருக்கு அவர் ஜோடியாக நடிக்கிறாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இருப்பினும் இன்னும் இந்த படம் குறித்த பிற தகவல்களை தாமரை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடகங்களில் நடித்து அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த தாமரை தற்போது சினிமாவில் நடிப்பதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இவரின் இந்த பதிவு வைரலாகி வருகின்றது.
#Thamarai