பிக்பாஸ் இறுதி கட்டத்தை எட்டியதில் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். கடந்த வாரம் நடந்த டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் விஷ்ணு வெற்றி பெற்று இறுதி மேடையை அலங்கரிக்க போகும் போட்டியாளர்களில் ஒருவராக மாறியுள்ளார்.
அதைத்தொடர்ந்து இன்னும் நான்கு போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்காக தேர்வாக உள்ளனர். அதில் அர்ச்சனா இருப்பார் என்பது 100 சதவீதம் உறுதியாக இருக்கிறது. அதை தொடர்ந்து மணி, தினேஷ் ஆகியோரும் இதற்கு தகுதியானவர்கள் தான்.
மீதம் இருக்கும் விஜய் வர்மா, மாயா, பூர்ணிமா, விசித்ரா இவர்களில் ஒருவருக்கு இறுதி போட்டியாளராகவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் பணப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதை மாயா எடுத்துவிட்டார் என்ற ஒரு தகவலும் கசிந்துள்ளது.
அதன்படி பார்த்தால் மீதம் இருக்கும் மூன்று நபர்களில் விசித்ரா இறுதி போட்டியாளராக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வகையில் இந்த ஐந்து போட்டியாளர்களில் யாருக்கு டைட்டில் கிடைக்கப் போகிறது என்பதுதான் சுவாரஸ்யம்.
பொதுவாக டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் வெற்றி பெறுபவர்கள் டைட்டில் வின்னராக மாட்டார்கள் என்பது கடந்த ஆறு சீசனின் ராசியாக இருக்கிறது. அப்படி பார்த்தால் விஷ்ணுவுக்கு டைட்டில் கிடையாது என இப்போதே ரசிகர்கள் கூற ஆரம்பித்து விட்டனர்.
ஆனால் அந்த ராசியை இவர் தகர்த்தெறிவாரா? என்ற ஆர்வமும் ஒரு பக்கம் இருக்கிறது. அதே போல் அர்ச்சனாவுக்கு அதிகபட்ச ஆதரவு இருப்பதால் அவர் டைட்டிலை அடிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் இந்த சீசன் டைட்டில் வின்னர் உண்மையில் பிரதீப் தான் என ஆடியன்ஸ் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.
- bigg boss 7 day 93
- bigg boss 7 tamil
- bigg boss 7 tamil promo
- bigg boss 7 tamil promo today
- bigg boss 7 tamil voting results
- bigg boss 7 vote result today
- bigg boss season 7
- Bigg Boss season 7 tamil
- bigg boss tamil 7
- bigg boss tamil season 4
- bigg boss tamil season 7
- bigg boss tamil season 7 promo
- bigg boss tamil season 7 unseen 3 {02 01 2024}
- bigg boss tamil season 7 unseen 5 {02 01 2024}
- bigg boss tamil season 7 voting
- bigg boss tamil season 7 voting results