கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 90 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் முக்கிய போட்டியாளராக இருக்கும் மாயா இரண்டாவது வாரமே வெளியேறி இருக்க வேண்டியவர். ஒருவேளை இவர் வெளியேறியிருந்தால் பிரதீப் ஆண்டனி முதற்கொண்டு ஒரு சில திறமையான போட்டியாளர்கள் உள்ளே இருந்திருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
இந்த சீசன் 7 நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும் அந்த வீட்டில் என்ன நடக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதே மாயாவாகத்தான் இருக்கிறார். கிட்டத்தட்ட மாயா எழுதிக் கொண்டிருக்கும் ஸ்கிரிப்டில் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் கைப்பாவைகளாக ஆக்கப்பட்டு வருகிறார்கள். மாயாவின் மாய வலையில் விழுந்து காணாமல் போய்விடுகிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலிருந்து மாயாவுடன் சேர்பவர்களை கவனித்து வந்தால் அவர்கள் தான் வீட்டை விட்டு அதிகமாக வெளியேறி இருக்கிறார்கள். மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த ஜோவிகா மற்றும் ஐஷு இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டார்கள். அதே நேரத்தில் மற்ற போட்டியாளர்களை தன்னுடைய வலையில் விழ வைத்து லாவகமாக பிரதீப் ஆண்டனியை வீட்டை விட்டு வெளியேற்றினார்.
இரண்டு வாரங்களாக எலிமினேஷன் விளிம்பு வரை சென்று விட்டு மாயா ஜெயித்து வந்தார். உண்மையில் சொல்லப் போனால் அவர் தனி ஒரு பிளேயர் ஆகத்தான் விளையாடி வருகிறார். தன் கிட்டே சேரும் அத்தனை போட்டியாளர்களையும் அவர் ஒவ்வொருவராக பலி கொடுத்து வெற்றி படியில் ஏறி வந்து கொண்டிருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நன்றாக விளையாடும் போட்டியாளர்களை தன்னுடன் சேர்த்துக்கொண்டு அவர்களுடைய கவனத்தை மொத்தமாக வேறொரு விஷயத்தில் செலுத்த வைக்கிறார். தெள்ளத் தெளிவாக அந்த போட்டியாளர்கள் வெளியில் நெகட்டிவாக ப்ரொஜெக்ட் ஆகும் வகையில் அவர்களை திரியேற்றி விடுகிறார். மாயாவை பிறகு பார்த்துக் கொள்ளலாம் இந்த வாரம் இந்த நபர் வெளியே போய் ஆக வேண்டுமென பார்வையாளர்களே மனசு மாறி விடுகிறார்கள்.
தந்திரமாக விளையாடினாலும் இந்த சீசனைப் பொருத்தவரைக்கும் மாயா தான் சிறந்த பிளேயர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தன்னை நம்பி வந்த அத்தனை பேரையும் காவு கொடுத்த மாயா பூர்ணிமாவை கூடவே வைத்திருப்பதற்கும் காரணம் இருக்கிறது. தன் வலையில் விழாதவர்களை பூர்ணிமாவின் மூலம் தான் மாயா வார்த்தைகளால் தாக்க வைக்கிறார். அதனால் தான் இன்னும் பூர்ணிமா உள்ளே இருக்கிறார்.
- archana nixen fight
- archana vs nixen fight
- bigg boss
- bigg boss 7 tamil
- bigg boss 7 tamil live
- bigg boss 7 tamil today dance
- bigg boss live today tamil
- bigg boss season 7
- Bigg Boss season 7 tamil
- bigg boss season 7 tamil promo
- bigg boss tamil 7
- bigg boss tamil season 7 unseen 1 {01 01 2024}
- bigg boss tamil today dance video
- bigg boss today promo
- Biggboss
- kamal haasan
- nexon vs archana fight
- nixen vs archana fight
- teaser
- teaser biggboss
- vijay television