பரபரப்பாக நடைப்பெற்று வந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி ஒரு வழியாக நிறைவுற்றதை தொடர்ந்து, இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் சில பிக்பாஸ் போட்டியாளர்கள் பார்டியில் கலந்து கொண்டனர். டைட்டிலை வென்ற அர்ச்சனா, இந்த பார்டியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ரன்னர் அப் ஆக மணிச்சந்திராவும், இரண்டாவது ரன்னர் அப் ஆக மாயாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பரபரப்பாக நடைப்பெற்று வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி சமீபத்தில் நடைப்பெற்றது. 106 நாட்கள் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிக்கு விஷ்ணு, தினேஷ், மணிச்சந்திரா, மாயா, அர்ச்சனா உள்ளிட்டோர் டாப் 5 போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நடன இயக்குநரான மணிச்சந்திரா, பிக்பாஸ் போட்டியின் ரன்னர் அப் பட்டத்தை வென்றார். இரண்டாவது ரன்னர் அப் பட்டத்தை மாயா வென்றார்.
பிக்பாஸ் டைட்டில் வின்னராக அர்ச்சனா அறிவிக்கப்பட்டார். பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக வைல்டு கார்டு மூலம் நுழைந்த ஒருவர், டைட்டிலை வென்றது இதுவே முதல்முறையாகும்.
மாயா, பிக்பாஸ் இல்லத்தில் இருந்த அனைத்து பெண்களிடமும் நெருங்கிய தோழியாக வலம் வந்தார். குறிப்பாக பூர்ணிமா உடைந்து அழுத சமயங்களில் எல்லாம் இவர் அவருக்கு பக்கத்துணையாக நின்றார். பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளிவந்த பின்பு அவர், ‘கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல’ என்ற பாடல் வரிகளுடன் இந்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
பிக்பாஸ் 7 போட்டியாளர்களுள், மாயாவுடன் நெருக்கமாக இருந்தவர்கள் பார்டியில் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்த புகைப்படங்களை பிரதீப் மில்ராய் வெளியிட்டுள்ளார். இவர், விஜய் டிவியில் முக்கிய உறுப்பினகளுள் ஒருவராக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பார்டியில் மாயா, பூர்ணிமா உள்பட இன்னும் சில பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள், இதனால்தான் மாயா இத்தனை வாரங்கள் எவிக்ட் ஆகாமல் பிக்பாஸ் இல்லத்தில் தங்கியிருந்தாரோ என சந்தேகித்து வருகின்றனர்.
- big boss 7 yesterday episode
- bigg boss 7
- bigg boss 7 tamil
- bigg boss 7 tamil full episode
- bigg boss 7 tamil today episode
- bigg boss season 7
- Bigg Boss season 7 tamil
- bigg boss season 7 winner
- bigg boss tamil 7
- bigg boss tamil season 7
- bigg boss tamil season 7 full episode
- bigg boss tamil season 7 live
- bigg boss tamil season 7 today episode
- bigg boss tamil season 7 today full episode
- bigg boss title winner season 7
- bigg boss unseen tamil season 7
Comments are closed.