Bigg boss season 7: தெருவில் நிறுத்திய வறுமை.. கைகொடுத்த டான்ஸ்

rtjy 26

Bigg boss season 7: தெருவில் நிறுத்திய வறுமை.. கைகொடுத்த டான்ஸ்

திருச்சிராப்பள்ளியை சேர்ந்தவர் விஜய் வர்மா. பெரிதாக படிக்க வில்லை. இளம் வயதில் அப்பா தவறிய நிலையில், மொத்தக்குடும்பமும் சென்னை குடிபெயர்ந்து இருக்கிறது. என்னசெய்வதென்று தெரியாமல், ஒரு டான்சர் பள்ளியில் வேலை கேட்டு அங்கேயே இருந்து டான்சை கற்று இருக்கிறார் விஜய். அந்த டான்ஸ்தான் அவரது வாழ்க்கையை நகர்த்தி சென்றது.

சூப்பர் சிங்கர் உட்பட பல நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பின்னால் ஆடும் நடனக்குழுவில் ஒருவராக இருந்து இருக்கிறார். 2008 ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதிபோட்டி வரை வந்தார்.

இது மட்டுமல்லாமல் ஜோடு நம்பர் ஒன், டான்ஸ் இந்தியா டான்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். பிரபுதேவா, அல்லு அர்ஜூன், ரவி தேஜா என பல முன்னணி நடிகர்களுடன் இவர் வேலை செய்திருக்கிறார். குறிப்பாக தலைவா திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து ஆடினார். அந்தப்படத்தில் சில காட்சிகளிலும் தோன்றி இருப்பார். இவருக்கு ப்ரியா வர்மா என்ற சகோதரி இருக்கிறார்.

Exit mobile version