கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ் சீசன் 7’ நிகழ்ச்சி வெற்றிக்கரமாக கடைசி வாரத்தை அடைந்துள்ளது.
உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த ஆறு ஆண்டுகளாக வெற்றிகரமாக நிகழ்ந்து வந்தது. இதையடுத்து 7வது சீசன் ஆரம்பமாகி இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டு இருகிறது.
இதில் போட்டியாளராக கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டனர்.
அதையடுத்து அன்னபாரதி, அர்ச்சனா, தினேஷ், கானா பாலா மற்றும் DJ ப்ராவோ ஆகியோ wild card entry இல் சென்றார்கள்.
சந்தோஷம் சோகம் சண்டை என பல உணர்வில் வீடு நகர்ந்தது.
தற்போது பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா, மணிசந்திரா, தினேஷ், விஷ்னு மற்றும் மாயா இறுதி போட்டியாளர்களாக இருக்கின்றனர்.
வைல்டு கார்டு மூலம் உள்ளே வந்த ஐவரில் இரண்டு பேர் மாத்திரமே போட்டியில் தற்போது வரை விளையாடிக்கொண்டு இருகிறார்கள்.
இவ்வாரத்தோடு பிக் பாஸ் முடிவதால் இதற்கு முன் வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் வீட்டிற்குள் வருகை தந்து, இறுதி போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இவர் ஒருவர் தான் வின்னராக முடியும் என கணிக்க முடியாத சீசனாகவே இருந்து வருகிறது.
5 இறுதி போட்டியாளர்களில் அதிக வாக்குகள் பெற்று அர்ச்சனா பெற்றி பெறுவார் என பலரும் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.
ஆனால் அர்ச்சனா வெற்றிப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும், அவர் 100 நாட்களை கடக்கவில்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது.
அந்தவகையில் இறுதி போட்டியாளர்களாக இருப்பதில் 100 நாட்களை கடந்த போட்டியாளர் என்றால், மாயா, விஷ்ணு மற்றும் மணிசந்திரா.
இதில் மக்களின் குறைந்த வாக்குகளை பெறுவது மாயா-வாக இருப்பார் என்றும், அவர் வெற்றியாளர் கிடையாது எனவும் பேசப்படுகிறது.
மக்களின் அதிக ஆதரவு அர்ச்சனா மற்றும் தினேஷிற்கு தான் கிடைக்கிறது. ஆனால் இவர்கள் இருவருமே 100 நாட்களை கடந்து வரவில்லை.
எனவே பிக் பாஸ் டைட்டிலை பெறுவது விஷ்ணு விஜயாக இருக்கலாம் என பேசப்படுகிறது.
யார் வெற்றி பெறுவார்களோ அவர்களுக்கு, ரூ.34 லட்சம் பணமும், ரூ.15 லட்சம் மதிப்புள்ள வீடும் பரிசாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- big boss 7 yesterday episode
- bigg boss
- bigg boss 7 tamil
- bigg boss 7 tamil full episode
- bigg boss 7 tamil today episode
- bigg boss season 7
- Bigg Boss season 7 tamil
- bigg boss tamil
- bigg boss tamil 7
- bigg boss tamil season 7
- bigg boss tamil season 7 full episode
- bigg boss tamil season 7 live
- bigg boss tamil season 7 today episode
- bigg boss tamil season 7 today full episode
- bigg boss unseen tamil season 7
- Biggboss
- biggboss tamil latest
- teaser biggboss