இந்த வாரம் என்ட்ரி கொடுக்கும் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?

tamilni 116

விஜய் டிவியில் பிக்பாஸ் எனும் ரியாலிட்டி ஷோ வெற்றிகரமாக 7ஆவது சீசனை நிறைவு செய்ய உள்ளது. இந்த சீசன் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகி தற்போது இறுதி வாரத்திற்கு வந்துள்ளது.

இந்த போட்டியில் விஷ்ணு, விஜய், மாயா, மணிச்சந்திரா, தினேஷ், அர்ச்சனா ஆகியோர் இறுதி போட்டிக்கு செல்கிறார்கள். இவர்களில் வலிமையான போட்டியாளராக இருப்பார் என கருதப்பட்ட நிலையில் அவர் போட்டியிலிருந்து எவிக்ட் செய்யப்பட்டார். 95 நாட்களை கடந்த இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் இறுதி போட்டி நடைபெறும் நிலையில் பிக்பாஸ் சீசனில் இருந்து வெளியேறிய கூல் சுரேஷ், யுகேந்திரன், ஜோவிகா, பாவா, அக்ஷயா, ஐஷு, நிக்ஸன், பிராவோ, விசித்ரா, பூர்ணிமா, ரவீனா ஆகியோர் இந்த இறுதி வாரத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார்கள். இதனால் பிக்பாஸ் வீடு களைகட்டும் என தெரிகிறது.

இறுதி போட்டியில் விஷ்ணு, விஜய், மாயா, மணிச்சந்திரா, தினேஷ், அர்ச்சனா ஆகியோரில் இருவரை மட்டும் விட்டுவிட்டு மீதமுள்ள 4 பேர் வரிசையாக அவர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் யாராவது ஒரு பிரபலம் போய் அழைத்து வருவார்கள். கடைசியாக இருக்கும் இருவரை கமல்ஹாசனே போய் அழைத்து வருவார். அவர்களில் யாருக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கிறதோ அவர்களே இந்த சீசனின் வின்னராக இருப்பார்கள். இத்துடன் பிக்பாஸ் ஹவுஸ் டெமாலிஷ் செய்யப்படும். இதைத் தொடர்ந்து அடுத்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்க வாய்ப்பிருக்கிறது.

Exit mobile version