tamilni 81 scaled
சினிமாபொழுதுபோக்கு

விசித்ரா – அர்ச்சனா இடையில் வாக்குவாதம்!

Share

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை சச்சரவு என்பது சாதாரணம் என்றாலும் இந்த சீசனில் சண்டை வராத நாளை இல்லை என்று கூறலாம். குறிப்பாக அர்ச்சனா கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களிடமும் சண்டை போட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் விசித்ரா மற்றும் அர்ச்சனா இடையே மோதல் ஏற்பட்டது.

இந்தநிலையில் அர்ச்சனாவை சமாதானப்படுத்தும் வகையில் மாயா அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார். முதல் வாரம் நீங்கள் மிகவும் ஸ்ட்ராங்காக ஒன்று சொல்கிறீர்கள், நான் இப்படித்தான் என்று, ஆனால் உடனடியாக நீங்கள் அதை மாற்றிவிட்டது விசித்ராவுக்கு புரியவில்லை என்று கூறுகிறார்.

அதற்கு அர்ச்சனா ’இத்தனை நாள் என்னிடம் பழகி இருக்காங்க, ஆனால் அதை எல்லாம் பண்ணும் போது மனசுக்குள் இதையெல்லாம் யோசித்துக் கொண்டே தான் பண்ணினார்களா? என்று பதில் அளிக்கிறார். அதற்கு மாயா ’நிஜமாகவே அவங்க உங்களை கூப்பிட்டு பேசுறாங்க என்றால் உங்கள் மீது அவர் அன்பு வைத்திருக்கிறார் என்று தான் அர்த்தம்’ என்று கூறுகிறார்.

மேலும் ‘இப்போ என்னால் அவ கூட பேச முடியுமா? அவ கோவமா இருக்காளா? என்று என்னிடம் கேட்கிறார்கள்’ என்று மாயா அர்ச்சனாவை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார். அனேகமாக அவருடைய முயற்சி வெற்றியில் தான் முடியும் என்று தான் தெரிகிறது.

Share
தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...