பிக்பாஸ் ரசிகர்களுக்கு வெளியான குட்நியூஸ்
அதிகளவான ரசிகர்களைக் கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோ தான் ‘பிக்பாஸ்‘. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் எளிதில் பிரபலமாகி ஒரு செலிபிரிட்டியாகி விடுகிறார்கள். அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 6சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் இதன் 7-ஆவது சீசன் விரைவில் ஆரம்பமாக இருக்கின்றது.
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 7க்கான ப்ரோமோ ஷூட் நேற்றைய தினம் நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. இதனால் நிகழ்ச்சியும் விரைவில் ஆரம்பமாகிவிடும் எனப் பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதுமட்டுமில்லாமல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியும் விரைவில் தொடங்கவுள்ளதால் பிக்பாஸ் நிகழ்ச்சியை விரைவில் தொடங்கி முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. இருப்பினும் கமல்ஹாசன் வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளதால் இந்த ப்ரோமோ ஷூட் முன்னரே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது எனவும் ஒரு தகவல் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் தொடக்கம் குறித்தும் அதில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் குறித்த லிஸ்டும் விரைவில் வெளியாகும் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a comment