ஒரு படத்தில் இத்தனை பிக் பாஸ் பிரபலங்களா?

tamilnaadi 70

ஒரு படத்தில் இத்தனை பிக் பாஸ் பிரபலங்களா?

தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் பல்வேறு பிக் பாஸ் பிரபலங்களும் இணைந்து நடிக்கும் புதிய படம் ஒன்று பற்றிய அறிவிப்பு வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்திள்ளது.

ஜேஎஸ் சதீஷ்குமார் என்பவர் புதிய இயக்குனராக அறிமுகமாகும் இந்த படத்திற்கு ’ஃபயர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பிக் பாஸ் போட்டியாளர்களான பாலாஜி முருகதாஸ், ரட்சிதா மகாலட்சுமி, சுரேஷ் தாத்தா, சாக்ஷி அகர்வால், போன்ற பிக் பாஸ் போட்டியாளர்களும் காயத்ரி, சாந்தினி, தமிழரசன், பிஜி சந்திரசேகர் உள்ளிட்டவர்களும் இணைந்து நடித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், பிரேம் குமார் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு, தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒரே படத்தில் நான்கு பிக் பாஸ் போட்டியாளர்கள் நடிக்கும் இந்த படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version