‘‘சண்டையை பத்த வைச்சுட்டாரே கமல்…’’ பிக்பாஸ் 5 புதிய புரோமோ

bigboss

விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள பி்க்பாஸ் – 5 நாளுக்கு நாள் புதிய அறிவிப்புக்களை வெளியிட்டு எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து வருகின்றது.

இந்த நிலையில் எப்போது ஆரம்பிக்கும் என காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது உலக நாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீஸன் 5 இன் புதிய புரோமோ கலகலப்பான கல்யாண சண்டையுடன் வெளியாகி உள்ளது.

இதில், ஒரு கல்யாண வீட்டில் காலையில் தொடங்கி இரவுக்குள் என்னென்ன கலாட்டாக்கள் நடக்கின்றன என்பதைக் காட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடக்கப்போகும் கலாட்டா, ரகளை, சண்டையை முன்னோட்டமாக காட்டுகிறார் கமல்ஹாசன்.

இந்தப் புரோமோ தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்தப் புரோமோவில் கல்யாண வீட்டில் ஆரம்பத்தில் நடக்கும் வரவேற்புகள் பின் போகப் போக நடக்கும் குளறுபடிகள், சண்டைகள் சச்சரவுகள், வத்திக்குச்சியை பற்ற வைக்கும் கமல் இவையெல்லாம் கூடி பெரு ரகளையே கல்யாண வீட்டில் வெடிக்கின்றது.

கல்யாண வீட்டில் இதேபோல் ஒரு குடும்பம் இங்கில்லை என ஆரம்பித்து கல்யாண வீடு கலாட்டா வீடாகிறது.

இந்த புதிய புரோமோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version