விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற சீரியலின் நாயகனாக அருண் பிரசாத்துக்கும் ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடித்து வரும் அர்ச்சனாவுக்கும் காதல் என்று விஜய் டிவி வட்டாரங்களில் கிசுகிசுக்கள் எழுந்தன.
இதனை அடுத்து இருவரும் காதலிப்பதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானாலும் இருவரும் இணைந்த புகைப் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதால் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை
இந்த நிலையில் தற்போது முதல் முறையாக அருண் பிரசாத், அர்ச்சனா ஆகிய இருவரும் இணைந்து உள்ள புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
இவர்களுடன் ரித்திகாவும் இந்த புகைப்படத்தில் உள்ளார். இந்த புகைப்படத்தை அடுத்து அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் காதலிப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இத்தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
#arunprasath #archana