அழகுக் குறிப்புகள்

முகப்பரு வாராமல் தடுக்க வேண்டுமா? இதோ சில அழகு குறிப்புகள்

girl face complexion acne pimples pus dermatologist 1
Share

பெரும்பாலான பெண்கள், ஆண்கள் சந்திக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பருக்கள். இவை வந்தால் முகத்தின் அழகே பாழாகும்.

இவற்றை போக்க அதிகம் பணம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்யலாம்.

தற்போது முகப்பருவை எப்படி எளியமுறையில் போக்கலாம் என்பதை பார்ப்போம்.

  • சிறிது படிகாரத்தை நீரில் கரைத்து அந்த நீரில் முகத்தை கழுவி வந்தால் முகப்பரு நீங்கும்.
  • வேப்பிலை கொழுந்தை நன்கு கழுவி சுத்தம் செய்து அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசிவிட்டு 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தினமும் இப்படி செய்வதன் மூலம் முகப்பரு நீங்கும்.
  • பாசிப்பயிறு மாவில் எலுமிச்சை சாறு கலந்து அதை முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் முகப்பரு நீங்கும்.
  • கடலை மாவோடு சந்தனப்பொடி, தயிர் மற்றும் எழுமிச்சை சாறை சேர்த்து குழைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி விட்டு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகப்பரு நீங்கும்.
  • வெள்ளரிப் பிஞ்சை தக்காளி ஜூஸில் ஊற வைத்துத் தொடர்ந்து முகம் கழுவி வர விரைவில் பரு மறையும். அத்துடன் மீண்டும் முகப்பரு வருவதைக் கட்டுப்படுத்தும்.

  • எலுமிச்சைச் சாற்றுடன் நீர் சேர்த்து பரு உள்ள இடங்களில் தடவி இரண்டு முதல் மூன்று மணி நேரம் கழித்து முகம் கழுவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் பருக்கள் மறையும். சருமத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கையும் எலுமிச்சைச் சாறு நீக்கும்.
  • 50 மில்லி நல்லெண்ணெயுடன் மிளகை ஊற வைக்க வேண்டும். 20 நாட்கள் கழித்துப் பயன்படுத்த வேண்டும். இதை முகப்பரு உள்ள இடங்களில் தடவி வர பருக்கள் நீங்கும்.
  • திருநீற்றுப்பச்சிலையை அரைத்து முகப்பரு உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் எளிதில் குணம் கிடைக்கும். திரிபலா பொடி கசாயத்தால் முகம் கழுவிவந்தாலும் பருக்கள் நீங்கும்.

#LifeStyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
35 1
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்குமருத்துவம்

துளசி இலையில் இத்தனை மருத்துவ குணங்களா?

துளசி இலையில் இத்தனை மருத்துவ குணங்களா? மூலிகையின் அரசி என்று அறியப்படும் துளசி செடியில் பல்வேறு...

20 12
அழகுக் குறிப்புகள்ஜோதிடம்பொழுதுபோக்கு

வீட்டில் எந்த திசையில் துளசிச் செடியை வைக்க வேண்டும் தெரியுமா….

அநேகமான மக்கள் வீடுகளில் துளசிச் செடியை வளர்ப்பார்கள். சிலர் வாஸ்துக்காகவும் இன்னும் சிலர் வீட்டில் நேர்மறையான...

15 21
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

முடி வளர்ச்சி மும்மடங்கு அதிகரிக்க வேண்டுமா..! இந்த ஒரு எண்ணெய் போதும்

அடர்ந்த நீளமான கூந்தலை தான் அனைத்து பெண்களும் விரும்புபவர்கள். முடி உதிர்வு என்பது ஆண், பெண்...

download 14 1 5
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

சருமத்தில் உள்ள தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர் !

சருமத்தில் உள்ள தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர் ! சருமப் பராமரிப்புக்கான கிரீம்கள் மற்றும் அழகுசாதனப்...