தொப்பையால் தொல்லையா? இதோ விரைவில் தீர்வு

தொப்பையால் தொல்லையா? இதோ விரைவில் தீர்வு

தொப்பையால் தொல்லையா? இதோ விரைவில் தீர்வு

இன்றைய துரித உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக, இளம் பராயத்தினருக்கு சிறு வயதிலேயே தொப்பை உருவாகிறது.

தொப்பை தற்போதைய அவசர வாழ்க்கையில் அனைவரினதும் பிரச்சினைகளில் ஒன்றாக காணப்படுகிறது.

தொப்பையை குறைப்பது கடினமான வேலை அல்ல. தொப்பையை குறைக்க முடிவு செய்த பின் உணவுப் பழக்கவழக்கங்களிலும் கட்டுப்பாடுகளை கொண்டுவருதல் அவசியமாகும்.

அவர்களுக்கு இரண்டே வாரங்களில் ஈஸியாக தொப்பையை குறைக்க இவற்றை பின்பற்றினாலே போதும்.

நல்ல உறக்கம்

woman sleeping

 

 

ஒரு நாளில் 8 மணிநேரம் சரியாக உறங்க வேண்டும். தூங்கும் போது குப்புறப்படுத்து உறங்குகள். இதனாலும் தொப்பை குறையும்.

 

 

உணவில் உப்பு குறைப்போம்

 

 

உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைத்தாலே போதும் உடலுக்கு ஆரோக்கியத்தை அளித்து தொப்பையை ஈஸியாகக் குறைக்கலாம்.

 

 

பச்சை மரக்கறிகள்

 

உண்ணும் உணவில் அதிகமாக பச்சை காய்கறிகளை சேர்த்துக்கொள்ளுங்கள். அல்லது அவற்றை ஜூஸ் செய்து குடித்து வந்தாலும் உடல் எடை விரைவில் குறைந்து தொப்பையும் குறைக்கும்.

 

 

 

உடற்பயிற்சி

 

தொப்பையை குறைக்கும் சில இலகு உடற்பயிற்சிகளை தினமும் மேற்கொள்ளுங்கள். உதாரணமாக இடுப்பை பக்கவாட்டில் வளைத்து கொள்வது குனிந்து கால்களை தொடுதல் போன்ற இலகு பயிற்சிகளை மேற்கொண்டு வாருங்கள்.

 

 

 

தண்ணீர் அருந்துங்கள்

 

மனிதனின் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கிய இடம் வகிப்பது தண்ணீர் குடித்தல். தண்ணீர் அதிகம் குடித்தால் நிச்சயம் 2 வாரங்களில் தொப்பையில் மாற்றத்தை உணர்வீர்கள். உடலில் கெட்ட கழிவுகளை நீக்குவதோடு நச்சுக்களையும் வெளியேற்றிவிடும்.

 

 

 

உணவில் நார்ச்சத்துக்களை எடுங்கள்

 

நார்ச்சத்துள்ள உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். நார்ச்சத்து உணவுகள் தொப்பையைக் கரையச் செய்துவிடும். உதாரணமாக ஓட்ஸ், ரொட்டி, பாண் போன்றவற்றை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

 

 

சைக்கிளில் செல்லுங்கள்

 

தினமும் ஒரு மணிநேரம் சைக்கிள் ஓடினால் இரண்டு வாரங்களில் உங்கள் உடலில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள். உடல் லேசான உணர்வை ஏற்படுத்தும். தொப்பையால் அவதியுறுவது குறையும்.

 

 

மெதுவான உண்ணுங்கள்.

 

உணவை எப்பொழுதும் ரசித்து ருசித்து உண்ண வேண்டும். உணவை வாயில் வைத்து நன்றாக அரைத்து பின் மென்று உண்ண வேண்டும். இதனைப் பின்பற்றினால் தொப்பையை என்றுமே வரலாமல் தடுக்கலாம்.

Exit mobile version