தங்கக் கடத்தல்! – மாலில் விஜய் அதிரடி – எகிறவைக்கும் ‘பீஸ்ட்’ அப்டேட்

தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாக்கி வரும் இப் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்த நிலையில் தற்போது படத்தின் கதை தொடர்பான புதிய தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

தங்கக் கடத்தல் தொடர்பான கதையே படத்தின் கதை. தங்க கடத்தல் செய்யும் தீவிரவாதக்குழு ஒன்று மால் ஒன்றில் புகுந்து, அங்குள்ள மக்களை பணயக் கைதிகளாக வைத்து கொண்டிருக்கும் நிலையில், அங்கு சிக்குண்டுள்ள மக்களை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்ற விஜய் மேற்கொள்ளும் அதிரடி தான் ‘பீஸ்ட்’ படத்தின் கதை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

beast1

படத்தில், செல்வராகவன் உள்பட மூன்று வில்லன்கள் நடித்து வருகின்றனர். தற்போது செல்வராகவன் தொடர்பான காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு முடிந்துள்ளன என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் போடப்பட்டும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அண்மையில், டெல்லியில் ஷாப்பிங் மால் காட்சிகளின் படப்பிடிப்பு நடந்தன என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தற்போது கோகுலம் ஸ்டுடியோவில் செட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த செட்டில் பத்து நாள்கள் படத்தின் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. இந்த படப்பிடிப்புகளைத் தொடர்ந்து படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ஜார்ஜியாவில் படமாக்கப்பட உள்ளன.

படத்தின் பாடல்கள் அனைத்தும் அனிருத் இசையில் தயாராகி வருகின்றன. ஒரு டூயட் பாடலை சிவகார்த்திகேயன் எழுதி தனுஷ் பாடி உள்ளார் என கூறப்படுகிறது.

மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத் திரைப்படத்தின் இந்த புதிய தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்பை மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Cinema

Exit mobile version