download 4 1 13
சினிமாபொழுதுபோக்கு

அயலான் அப்டேட்!

Share

டாக்டர், டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் அயலான்.

இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அயலான் அப்டேட் இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அயலான் படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இப்படத்தின் அடுத்த அறிவிப்பு நாளை காலை 11.04 மணிக்கு வெளியாகும் என அறிக்கை வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.

அதில், இப்படத்திற்காக எந்த சமரசமும் செய்து கொள்ள படக்குழு விரும்பவில்லை. அயலான் படத்தில் 4500-க்கும் அதிகமான விஎஃப்எக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் படம் முழுவதும் ஏலியன் கதாப்பாத்திரம் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயலானுடன் வேறு உலகத்திற்கு செல்ல அனைவரும் தயாராக இருங்கள் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 3 7
சினிமாபொழுதுபோக்கு

விஜய், சூர்யாவின் ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் 4K டிஜிட்டல் முறையில் மீண்டும் வெளியாகிறது! – ரசிகர்களுக்கு உற்சாகம்!

நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்து, ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றான ‘ப்ரண்ட்ஸ்’...

images 2 8
பொழுதுபோக்குசினிமா

நடிகை துளசி திடீர் அறிவிப்பு: டிசம்பர் 31க்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு

பிரபல நடிகை துளசி (Tulasi) ஒரு முக்கியமான முடிவை அறிவித்துள்ளார். வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குப்...

image 34967526a6
சினிமாபொழுதுபோக்கு

அதிதி ராவிற்குப் பிறகு ஸ்ரேயா சரண்: நடிகையின் பெயரால் போட்டோகிராபர்களுடன் பேச்சு!

பிரபல நடிகை அதிதி ராவ் ஹைதரி மூன்று நாட்களுக்கு முன்பு இதேபோன்ற ஒரு சிக்கலைப் பகிர்ந்துகொண்ட...

சினிமாபொழுதுபோக்கு

டுவெயின் ஜோன்சன் நடிக்கும் ‘மோனா’ (Moana) நேரடி-திரைப்பட டீஸர் வெளியீடு: ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு!

பிரபல ஹொலிவூட் நடிகர் டுவெயின் ஜோன்சன் (Dwayne Johnson) நடிக்கும், டிஸ்னியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நேரடி-திரைப்படமான...