உலகளவில் 6,000 கோடியைக் கடந்த அவதார் 3: 10 நாட்களில் பிரம்மாண்ட வசூல் சாதனை!

25 6952424d7d3f6

ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ (Avatar 3) திரைப்படம் வெளியாகி 10 நாட்களைக் கடந்துள்ள நிலையில், வசூலில் புதிய மைல்கற்களை எட்டி வருகிறது.

கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி வெளியான இப்படம், முதல் 10 நாட்களில் உலகளவில் சுமார் 760 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 6,300 கோடி ரூபாய்) வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் சேர்த்து 10 நாட்களில் சுமார் 137 கோடி ரூபாய் (Net) வசூலித்துள்ளது. இதன் மூலம் 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் படமாக இப்படம் உருவெடுத்துள்ளது.

முதல் இரண்டு பாகங்களைப் போலன்றி, இந்த மூன்றாவது பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. படத்தின் கதை சற்று மந்தமாக இருப்பதாகவும், முந்தைய பாகங்களின் பிரம்மாண்டத்தை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை என்றும் ஒரு தரப்பினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், படத்தின் காட்சி அமைப்புகள் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் (Visual Effects) வழக்கம் போல ரசிகர்களை வியக்க வைத்துள்ளன.

அவதார் 3 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2029 ஆம் ஆண்டில் அவதார் 4 மற்றும் 2031 ஆம் ஆண்டில் அவதார் 5 ஆகிய பாகங்களை வெளியிட ஜேம்ஸ் கேமரூன் திட்டமிட்டுள்ளார். இந்தத் தொடர் வசூலில் சரிவைச் சந்தித்தால் மட்டுமே அடுத்தடுத்த பாகங்களின் தயாரிப்பு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version