52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் அவதார்-2

1796009 avatar

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் ‘அவதார்-2 : தி வே ஆஃப் வாட்டர்’ இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் சிறப்பு முன்னோட்ட காட்சிகளை பார்த்தவர்கள், பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் காட்சியமைப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 52 ஆயிரம் திரையரங்குகளில் மொத்தம் 160 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அவதார் 2 வெளியாகிறது.

இந்தியாவில் சமீபத்தில் அவதார் 2 படத்திற்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேலாக டிக்கெட் விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் சர்வதேச அளவில் பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#cinema

 

Exit mobile version