21 600b566fbe247
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்குமருத்துவம்

தொடர்ந்து வெந்தயத்தை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

Share

அனைவரின் வீட்டு சமையலறையிலும் காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம் .

ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது இந்த வெந்தயத்தில். பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்வதில் வெந்தயம் ஒரு சிறந்த மருத்துவ பொருளாக விளங்குகிறது.

வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.

இதனை தொடர்ந்து எடுத்து கொள்வது உடலுக்கு நல்லது. அந்தவகையில் வெந்தையத்தை தொடர்ந்து சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

  • வெந்தயம் தொடர்ந்து சாப்பிடுவதால் செரிமான திறன் மேம்படுகிறது. இதனால் பசியின்மை பிரச்சனை தீர்கிறது. வயிறு பொறுமல் நீக்கி குடலை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
  • வெந்தயத்திலுள்ள எண்ணெய் பசை தலைமுடிக்கு வளர்ச்சியையும், கருமை நிறத்தையும் தருகிறது. எனவே கூந்தல் தைலங்கள் மற்றும் எண்ணெய் தயாரிப்பில் பயன்படுகிறது.
  • வெந்தயத்தில் அதிக அளவில் கரையும் நார்ச்சத்து உள்ளது. இது ஜீரணத்தின் வேகத்தைக் குறைத்து கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணும் அளவையும் குறைக்கிறது.
  • வெந்தயத்தை தொடர்ந்து உணவில் எடுத்துக்கொண்டு வந்தால் தேவையற்ற ஊளை சதை என சொல்லப்படும் கொழுப்புகள் முற்றிலும் குறைகிறது.
  • காலை வேளையில் வெந்தயம் தொடர்ந்து சாப்பிட்ட வந்தால் நாட்பட்ட மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகள் தீர்கின்றது.
  • வெந்தயம்தொண்டையில் ஏற்படும் அல்சர், புண், வலி மற்றும் கொப்பளங்கள் ஆகியவற்றை முற்றிலும் நீக்குகின்றது. இருமல் மற்றம் தொண்டை கரகரப்பிலிருந்து நிவாரணம் தருகின்றது.
  • வெந்தயத்தை முதல் நாள் இரவு வெது வெதுப்பான நீரில் ஊர வைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் சிறு நீரக எரிச்சல் மற்றும் கிட்னி பிரச்சனைகள் முற்றிலும் தீரும்.
  • வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரை குடித்து வந்தால் நெஞ்சு எரிச்சல் மற்றும் ஒவ்வாமை தீரும்.
  • தொண்டையில் புண்ணால் ஏற்பட்ட இடங்களில் வெந்தய தண்ணீர் படும் போது நல்ல இதமாக இருப்பதுடன் உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிச்சி அளிக்கின்றது.

#LifeStyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 1
சினிமாபொழுதுபோக்கு

கோலிவுட்டில் புது ஜோடி!! சூர்யாவின் அடுத்த பட ஹீரோயின்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ...

10 4
சினிமாபொழுதுபோக்கு

தொகுப்பாளினி பிரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து...

9 4
சினிமாபொழுதுபோக்கு

38 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கிறாரா சமந்தா

நடிகை சமந்தா தெலுங்கில் வெளிவந்த Ye Maaya Chesave திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின்...

11 3
ஏனையவைசினிமாபொழுதுபோக்கு

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்.. பூரிப்பில் ஷாலினி!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குக்கும் மேலாக நடித்து வருகிறார். மேலும் அவர் தற்போது...