பொதுவாக பாலில் டிரிப்டோபான், மெக்னீசியம் மற்றும் மெலடோனின் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது தூக்கம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க உதவுகிறது.
இதனை இரவில் ஒரு கப் குடிப்பது உடலுக்கு நன்மையே தரும்.
அந்தவகையில் இரவில் பால் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- தினமும் இரவில் ஒரு கப் பாலில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் வென்னிலா எசன்ஸ் சேர்த்து குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.
- வயிற்றில் உள்ள கிருமி அழிய தினமும் பாலில் மஞ்சள் கலந்து நன்கு காய்ச்சி ஒரு டம்ளர் குடித்து வரலாம்.
பாலில் பொட்டாசியம் உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும்.
தொடர்ந்து தினமும் பால் குடிப்பது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கிறது.
எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. இத்தகைய கால்சியம் வயது அதிகரிக்கும் போது குறைய ஆரம்பிக்கும். பாலில் உள்ள கால்சியம் உங்களின் உடலை பராமரிக்கும்.
இரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டிற்கும், உடல் பருமன் குறைவதற்கும், இதய நோயிற்கும், புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளவர்களும் பாலை தினமும் எடுத்துக் கொள்ளலாம்#LifeStyle
Leave a comment