67வது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 8 விருதுகளை குவித்துள்ளது.
இதில் சிறந்த இயக்குனர் (சுதா கொங்கரா), சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த இசை ஆல்பம் (ஜி.வி.பிரகாஷ்), சிறந்த துணை நடிகை (ஊர்வசி), சிறந்த பின்னணி பாடகர் (கோவிந்த் வசந்தா, கிறிஸ்டின் ஜோஸ்), சிறந்த பின்னணி பாடகி (தீ), சிறந்த ஒளிப்பதிவு (நிகோத் பொம்மி) ஆகிய பிரிவுகளில் விருதுகளை அள்ளி சென்றுள்ளது.
இப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் ஏராளமான விருதுகளை குவித்ததோடு, 5 தேசிய விருதுகளையும் தட்டி சென்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#sooraraipottru
1 Comment