சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தும் அனுபமா பரமேஸ்வரன்

124897226 fb img 1653371059448

சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தும் அனுபமா பரமேஸ்வரன்

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் பிரபலமான அனுபமா பரமேஸ்வரன், இப்போது தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த டில்லு ஸ்கொயர் படத்தில் படு கிளாமராக நடித்திருந்தார். படத்துக்கு இளைஞர்களின் ஆதரவு பெரியளவில் கிடைக்க, இப்படம் 100 கோடி ரூபாய் மேல்வசூலை ஈட்டியது.

கார்த்திகேயா 2 மற்றும் டில்லு ஸ்கொயர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் அனுபமா பரமேஸ்வரன், சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தியதாக கூறப்படுகிறது.

முன்னதாக அனுபமா ஒரு படத்திற்கு ரூ. 1 கோடி சம்பளம் பெற்று வந்த நிலையில் தற்போது அதனை ரூ. 2 கோடியாக உயர்த்தியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

Exit mobile version