44036824 9
பொழுதுபோக்குசினிமா

“டிரோல்களால் மலையாளப் படங்களில் நடிக்கப் பயந்தேன்”: நடிகை அனுபமா பரமேஸ்வரன் உருக்கம்!

Share

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் காதல் படமான ‘பிரேமம்’ மூலம் அவர் அறிமுகமானார்.

அதன்பின்னர் தமிழ் பக்கம் வந்த அவர், தனுஷின் ‘கொடி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தவர், இப்போது கடைசியாக துருவ் விக்ரமுக்கு ஜோடியாக ‘பைசன்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ஒரு பேட்டியில் அனுபமா அவர் சந்தித்த சில சவால்கள் குறித்துப் பகிர்ந்துள்ளார்.

“பிரேமம் படத்திற்குப் பிறகு, டிரோல்களால் மலையாளப் படங்களில் நடிக்கத் தயங்கினேன், பயந்தேன். மலையாள சினிமாவில் பலர் எனக்கு நடிக்கத் தெரியாது என்று கூறினர். ஆனால், எனக்குக் கிடைத்த வாய்ப்பை நான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன்.

என் முழு உழைப்பைச் செலுத்தினேன். இன்று என்னைத் திரும்பிப் பார்த்தால் எனக்குப் பெருமையாக உள்ளது.

இப்போது, மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் பணியாற்றி வருகிறேன். எனது நடிப்பு வாழ்க்கை ஒரு புதிய அத்தியாயத்துக்குள் (New Chapter) நுழைந்திருக்கிறது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...