பிக்பாஸ் 8 முடிந்ததும் தனது வாழ்க்கையில் இருந்து ஒருவரை தூக்கி எறிந்த அன்ஷிதா.. யார் அது, ஓபனாக கூறிய பிரபலம்

4 43

பிக்பாஸ் 8 முடிந்ததும் தனது வாழ்க்கையில் இருந்து ஒருவரை தூக்கி எறிந்த அன்ஷிதா.. யார் அது, ஓபனாக கூறிய பிரபலம்

பிக்பாஸ் 8, நிகழ்ச்சி முடிந்தது, வெற்றியாளராக முத்துக்குமரனும் ஜெயித்துவிட்டார்.

100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கான சம்பளத்தை தாண்டி பெரிய பரிசுத் தொகையையும் பெற்றுவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து அவர்களை பற்றி நிறைய விஷயங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அப்படி சீரியல் நடிகையும், பிக்பாஸ் 8 பிரபலமுமான அன்ஷிதா இறுதி நிகழ்ச்சியில் கூறிய விஷயம் வைரலாகி வருகிறது.

நான் உள்ளே வரும்போது ஒருவர் என்னை மிகவும் உடைத்து தான் என்னை அனுப்பினார். அந்த நபர் எனது வாழ்க்கையில் எனக்கு வேண்டுமா என பிக்பாஸ் 8 வீடு யோசிக்க வைத்தது.

வெளியே வந்தபோது அந்த நபரிடம் எப்படி கெஞ்சி அவரிடம் பழகினேனோ அவரை நேரில் சந்தித்து நீங்கள் எனது வாழ்க்கையில் தேவையில்லை என தைரியமாக கூறினேன்.

அதுதான் நான் பிக்பாஸ் பிறகு செய்த விஷயம். நான் இப்போது சந்தோஷமாக இருக்கிறேன், பிக்பாஸ் 8 வீடு அன்ஷிதாவை திரும்ப கொடுத்துவிட்டது என கூறியுள்ளார்.

Exit mobile version