‘அண்ணாத்த’வில் இணைந்த ஈழத்தமிழன்!

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ‘அண்ணாத்த’.

படத்தின் பணிகள் முடிவடைந்து வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.

நாளுக்கு நாள் புதுபுது அப்டேட்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தும் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் டி.இமான்.

யாழ்ப்பாணத்தின் புகழ்பூத்த நாதஸ்வர கலைஞர் கே.பி.குமரன் ‘அண்ணாத்த’படத்தின் பின்னணி இசையில் பங்குபற்றியுள்ளாராம்.

புகைப்படத்துடன் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார் டி.இமான்.

இந்த தகவலை ஈழத்தமிழர்கள் சமூகவலைத்தளங்களில் ரெண்டாக்கி வருகின்றனர்.

 

Screenshot 20211014 171825 Facebook copy 1600x2794

Exit mobile version