உடல் ரீதியான தப்பான கமெண்ட்!! உருக்கமாக பேசிய பிரபல நடிகை

24 66347dbc1e0c1

உடல் ரீதியான தப்பான கமெண்ட்!! உருக்கமாக பேசிய பிரபல நடிகை

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அன்னா ரேஷ்மா ராஜன். இவர் கடந்த 2017 -ம் ஆண்டு வெளியான அங்கமாலி டைரீஸ் ஹீரோயினாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இப்படத்தை தொடர்ந்து அய்யப்பனும் கோஷியம் படத்தில் பிரித்விராஜின் மனைவியாக நடித்திருந்தார்.

இவர் பிசியான நடிகையாக மாறுவார் என எதிர்பார்த்தால் பெரிய அளவில் எந்த படத்திலும் அவரை எந்த படத்திலும் பார்க்கமுடியவில்லை. காரணம், அவரது உடல் எடை அதிகரித்தது தான் என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில் அன்னா ரேஷ்மா ராஜன் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு பலரும் அவரை கிண்டலாக விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய அவர், சமீபகாலமாக நான் நோயால் அவதிப்பட்டு வருகிறேன். சில நேரங்களில் உடல் எடை தானாகவே கூடுகிறது.அதன் பின் தானாகவே உடல் மெலிந்து விடுகிறது. என்னை உடல் ரீதியாக என்னை யாரும் விமர்சிக்க வேண்டாம். நடனம் பிடித்து இருந்தால் பாருங்கள் இல்லை என்றால் கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்று அன்னா ரேஷ்மா ராஜன் கூறியுள்ளார்.

Exit mobile version