ஐந்தாவது திருமணம்.. தயாரிப்பாளரை மணந்ததாக வந்த செய்திக்கு அஞ்சலி பதிலடி

24 66101d7af3502

ஐந்தாவது திருமணம்.. தயாரிப்பாளரை மணந்ததாக வந்த செய்திக்கு அஞ்சலி பதிலடி

நடிகை அஞ்சலி கற்றது தமிழ் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். அதன் பிறகு அங்காடித்தெரு, மங்காத்தா, கலகலப்பு உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது படங்கள், வெப் சீரிஸ் என பிசியான நடிகையாக அஞ்சலி இருந்து வருகிறார்.

இந்நிலையில் அஞ்சலி ஒரு தெலுங்கு தயாரிப்பாளரை திருமணம் செய்துகொண்டார் எனவும், அவர் ஏற்கனவே விவாகரத்து ஆனவர் என்றும் ஒரு வாரத்திற்கு முன்பு செய்தி பரவியது.

அது பற்றி செய்தியாளர்கள் அஞ்சலியிடம் பிரெஸ் மீட்டில் கேள்வி எழுப்ப, அவர் சத்தமாக சிரித்துவிட்டார். எனக்கு ஐந்தாவது முறையாக திருமணம் நடந்தி இருக்கிறார்கள். நானும் கேள்விப்பட்டேன். யாரோ சொல்லி தான் எனக்கு தெரிந்தது, அதில் இருந்தே தெரிந்திருக்கும் இது நிஜமில்லை என்று.”

“திருமணம் நிச்சயம் செய்துகொள்வேன், ஆனால் இப்போது இல்லை” என அஞ்சலி கூறி இருக்கிறார்.

Exit mobile version