இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு கடந்த மாதம் 24-ம் திகதி மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதனால் அவர் தனிமைபடுத்தபட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
7 நாட்கள் கடந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், நெகட்டிவ் என வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகவலை அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் தனது வழக்கமான பணிக்கு திரும்பியதாக கூறி உள்ளார். குணமடைவதற்காக வாழ்த்தி பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு அமிதாப் பச்சன் நன்றி தெரிவித்துள்ளார்.
#amitabhbachchan #coronavirus #cinema
Leave a comment