1 28
சினிமாபொழுதுபோக்கு

“அன்புக்குரிய ரசிகர்களுக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை” – நடிகர் அஜித் குமார்

Share

“அன்புக்குரிய ரசிகர்களுக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை” – நடிகர் அஜித் குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி படம் வெளிவரவுள்ளது. அதை தொடர்ந்து குட் பேட் அக்லி படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. Latest Tamil movies

நடிகர் அஜித் தனது அணியுடன் இணைந்து துபாயில் 24 மணி நேரம் நடைபெற்ற கார் ரேஸில் பங்கேற்றார். இந்த கார் ரேஸில் 911 GT3 R என்ற பிரிவில் அஜித் குமாரின் அணி 3வது இடத்தை பிடித்துள்ளனர். மேலும் gt4 பிரிவில் Spirit of the race எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.

இவருடைய வெற்றிக்கு திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். ரஜினிகாந்த், கமல் ஹாசன், சிவகார்த்திகேயன், சூர்யா, சமந்தா உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அறிக்கையை அஜித்தின் சார்பில், அஜித்துடைய மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த அறிக்கையில் “அன்பான அனைவருக்கும் வணக்கம்! துபாய் கார் பந்தய ரேஸின் போதும் நிகழ்வுக்கு பின்னரும் இப்போதும் எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லாம் வல்ல இறைவன், எனது குடும்பத்தினர், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை”.

“இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார்ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது. இந்த பயணம் என்னை பற்றியது மட்டுமல்ல உங்களை பற்றியதும்தான். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்கள்! நன்றி” என இந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
f826ae523888053ebb5ed50ee1d53e8269218cef31578
சினிமாபொழுதுபோக்கு

ஜன நாயகன் முன்னோட்டத்திற்குத் திரையரங்குகளில் முன்பதிவு: விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் (Trailer) நாளை...

750x450 643120 parasakthi movie
பொழுதுபோக்குசினிமா

சூர்யாவின் ‘பராசக்தி’ படத்திற்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு: 10-ஆம் திகதி வெளியாவது உறுதி!

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீட்டிற்குத் தடை விதிக்கச்...

suresh4 1767331292
பொழுதுபோக்குசினிமா

சல்லியர்கள் படத்திற்குத் திரையரங்குகள் மறுப்பு: நேரடியாக ஓடிடியில் வெளியீடு – சுரேஷ் காமாட்சி காட்டம்!

இயக்குனர் கிட்டு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான ‘சல்லியர்கள்’ திரைப்படம் திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால்,...

articles2FqpILCUr6EEqQv1X62MFX
சினிமாபொழுதுபோக்கு

டிமான்ட்டி காலனி 3 ஆரம்பம்: மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திகில் திரைப்படமான ‘டிமான்ட்டி...