நடிகர் அஜித் இலங்கை ரசிகர்களுக்கு வாழ்த்து கூறிய சம்பவம் ஒன்று இணையத்தில் வைராலாகி வருகின்றது.
சமீபத்தில் அஜித் பிரிட்டன் நாட்டிற்குச் சென்று இருந்தபோது அங்கிருந்த ரசிகர் ஒருவர் அஜீத்தை அணுகி, ‘தன்னுடைய நண்பர் ஒருவர் உங்களுடைய தீவிர ரசிகர் என்றும், இலங்கையை சேர்ந்த அவருக்கு இன்று பிறந்தநாள் என்றும் நீங்கள் வாழ்த்து தெரிவித்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்’ என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக அவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட அஜித் அந்த ரசிகருடன் பேசியுள்ளார்.
ரசிகருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று கூறிய அஜித், ‘நல்லா இருங்க.. ஆரோக்கியமா இருங்க,, சந்தோஷமா இருங்க’ என்று கூறினார். அஜித்தின் எதிர்பாராத அழைப்பை கேட்ட லாவன் என்ற அந்த இலங்கை ரசிகர் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
தற்போது இதுகுறித்த வீடியோ ஒன்று சமூகலைத்தளங்களில் வேகமாகி வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#cinema #ajith
#AK wishing a fan birthday 😍#AK #AjithKumar #AK61 #Ajithkumar𓃵 #AK62 #Valimai #AK63
pic.twitter.com/MyS2mWWYAw— AK𓃵 (@AjithKumar_AK__) June 29, 2022
Leave a comment