3 38
சினிமாபொழுதுபோக்கு

வாழ்க்கை சிறியது, 53 வயதில்.. அஜித் குமார் எமோஷனல்

Share

வாழ்க்கை சிறியது, 53 வயதில்.. அஜித் குமார் எமோஷனல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள விடாமுயற்சி படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளிவரவுள்ளது.

சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து குட் பேட் அக்லி படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

தற்போது, கார் ரேஸிங்கில் அஜித் கவனம் செலுத்தி வரும் நிலையில், சமீபத்தில் தனது அணியுடன் இணைந்து துபாயில் 24 மணி நேரம் நடைபெற்ற கார் ரேஸில் பங்கேற்றார்.

இந்த கார் ரேஸில் 911 GT3 R என்ற பிரிவில் அஜித் குமாரின் அணி 3வது இடத்தை பிடித்து. gt4 பிரிவில் Spirit of the race என்ற விருதை பெற்றுள்ளனர்.

இந்நிலையில், அப்போது வெற்றி பெற்ற பின் அஜித் பேசிய விஷயங்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ” எனக்கு விளையாட்டினை அறிமுகப்படுத்தியதே என் அப்பா தான். ஆனால், அவர் இப்போது இல்லை.

அப்பாவின் நண்பர் விமல் ஷா அங்கிள் ரேஸராக இருந்தார். அவரிடம் இருந்து தான் எனக்கு ரேஸிங் மீது ஆர்வம் ஏற்பட்டது. 18 வயதில் வந்த கனவு இன்று 53 வயதில் நிஜமாகிவிட்டது.

நான் ஆசீர்வதிக்கப்பட்டவன். மக்கள் அவர்களது பணியை சரிவர செய்தால். வாழ்க்கையில் அவர்களுக்கு கிடைக்க வேண்டியது, கண்டிப்பாக கிடைக்கும். வாழ்க்கை மிகவும் சிறியது, அதனால் பிடித்தது போன்று வாழுங்கள், எதையும் சீரியஸாக எடுத்து கொள்ளாதீர்கள்” என்று கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...