11 15
சினிமாபொழுதுபோக்கு

அஜித்னா பொண்ணுகளுக்கு ரொம்ப பிடிக்கும்..! ஆனா சினிமால திறமைய காட்டல.. பிரபல இயக்குநர்

Share

அஜித்னா பொண்ணுகளுக்கு ரொம்ப பிடிக்கும்..! ஆனா சினிமால திறமைய காட்டல.. பிரபல இயக்குநர்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக திகழ்ந்தவர் விக்ரமன். இவர் பார்த்திபரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். இவர் இயற்றிய படங்கள் எல்லாமே குடும்பப் பாங்கான மற்றும் பெண்கள் மீது அக்கறை கொண்ட சமூகப் படமாகவும் காணப்பட்டன.

1990 ஆம் ஆண்டு வெளியான புது வசந்தம் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் இயக்குனர் விக்ரமன். இவருடைய இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரிட் ஆக காணப்படுகிறது. ஆனாலும் 2014க்கு பிறகு எந்தவொரு படத்தையும் இயக்கவில்லை.

இந்த நிலையில், பிரபல ஊடகம் ஒன்றுக்கு இயக்குநர் விக்ரமன் அளித்த பேட்டி வைரலாகி உள்ளது. அதில் அஜித் குமார் பற்றியும் மணிவண்ணன் பற்றியும் தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மணிவண்ணன் பற்றி கூறுகையில், உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார் மணிவண்ணன். அந்த டைம்ல அவர் ரொம்பவே பிஸியாக நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். நான் சூர்யவம்சம் படத்தில் இவர் நடித்தால் நல்லா இருக்கும் என்று அவரை அணுகினேன்.

ஆனாலும் அவர் அப்போது தான் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதாக சொன்னார். எனினும் இந்த கேரக்டர்ல நீங்க பண்ணினா ரொம்ப நல்லா இருக்கும் என எடுத்து சொன்னேன். அதன்பின் அவரும் சம்மதித்தார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட என்னை அவர் சார் சார் என கூப்பிடுவார். ஆனாலும் நான் அவரிடம் பணி புரிந்தவர் என்னை அப்படி கூப்பிட வேண்டாம் பெயர் சொல்லியே கூப்பிடுங்கள் என்று சொன்னேன்.

அதற்கு அவர் நான் உங்களுக்கு மரியாதை கொடுத்தால் தான் பிறரும் மதிப்பார்கள் என்று சொன்னார். அவர் இயக்குனராக பல படங்களை இயக்கியிருக்கார். ஆனால் கதையை எழுதி வைத்து சொல்ல மாட்டார் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து என்ன தோணுதோ அந்த டயலாக்கை தான் சொல்லுவார். இவருக்கு பல திறமைகள் இருந்தும் அதனை சினிமாவில் வெளி காட்டவே இல்லை என மணிவண்ணன் பற்றி தெரிவித்துள்ளார்.

அதேபோல அஜித் குமாரும் 1998 ஆம் ஆண்டுகளில் மிகப் பிரபலமாக காணப்பட்டதாகவும் காதல் மன்னன், காதல் கோட்டை திரைப்படங்களின் போது அஜித் புகழின் உச்சியிலே காணப்பட்டார் என்றும் அப்போது அவர் 10 லட்சம் மதிப்பிலான பைக்கில் ஹெல்மெட்டும் அணியாமல் வருவார். இவரை பார்ப்பதற்காகவே பெண்கள் பலரும் கூடியிருப்பார்கள். அப்படி பலருக்கு கனவு கண்ணனாக இருந்தவர் அஜித் குமார் என தெரிவித்துள்ளார் .

 

 

Share
தொடர்புடையது
Untitled 38
சினிமாபொழுதுபோக்கு

த.வெ.க கொடி நிறத்தில் திரிஷாவின் உடை: ரசிகர்கள் விவாதம்!

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, நடிகர் விஜய் தீவிரமாகச் செயல்பட்டு வரும்...

Untitled 36
சினிமாபொழுதுபோக்கு

சமூக வலைதளங்களில் பேசுபொருளாகும் விஜய் – திரிஷா விவகாரம்: வைரலாகும் புதிய தகவல்கள்!

நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி...

05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...