நடிகை சினேகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. அடேங்கப்பா இத்தனை கோடியா

1 14

புன்னகை அரசி என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் நடிகை சினேகா. மாதவன் நடிப்பில் வெளிவந்த என்னவளே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து ஆனந்தம், வசீகரா, ஜனா, போஸ், வசூல் ராஜா, ஆட்டோகிராஃப் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பணிபுரிந்து வந்தார்.

அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர, 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த நட்சத்திர தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

நடிகையாக மட்டுமின்றி தற்போது தொழிலதிபராகவும் வலம் வரும் சினேகாவுக்கு இன்று பிறந்தநாள். ஆம், தனது 44வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை சினேகாவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், சினேகாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சினேகாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 45 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம். கோட் படத்திற்காக அவர் ரூ. 1 கோடி வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version