அதற்காக தான் ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்தேன் .. வெளிப்படையாக பேசிய சங்கீதா

23 65785a4172e3a

அதற்காக தான் ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்தேன் .. வெளிப்படையாக பேசிய சங்கீதா

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் தான் ரெடின் கிங்கிலி. கடந்த ஆண்டு இவர் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதுமட்டுமின்றி சில விமர்சனங்களும் எழுந்தது. அதாவது, சங்கீதா ரெடின் கிங்ஸ்லியை பணத்திற்காக திருமணம் செய்து கொண்டார். சங்கீதாவுக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கூறி வந்தனர்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சங்கீதா, தன் மீது வந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து இருக்கிறார். அதில், எனக்கு ஏற்கனவே குழந்தை உள்ளது என்று செய்திகள் வந்தது. அது என் சகோதரரின் மகள் தான். அதை இன்று வரை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் மேல் சரி நீங்க அப்படியே நினைத்துக்கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டேன். மேலும் நான் ரெடின் கிங்ஸ்லியை பணத்திற்காக திருமணம் செய்தேன் என்று சொல்கிறார்கள். நானும் ஒன்னும் இல்லாமல் வந்தவள் இல்லை. இதற்கு எல்லாம் விளக்கம் கொடுத்துட்டு இருக்க முடியாது. ரெடின் கிங்ஸ்லியின் குணம் எனக்கு பிடித்து இருந்தது. அதனால் தான் திருமணம் செய்தேன் என்று சங்கீதா தெரிவித்துள்ளார்.

Exit mobile version